Épisodes

  • ம்... கொஞ்சம் பேசலாமா?: செக்ஸ் சாட்... மார்பிங்... என் காதல் கணவரை மீட்பது எப்படி? #Neelshears
    Apr 21 2021

    நான் நிறைய எதிர்ப்புகளைச் சமாளிச்சு எதிர்பார்ப்புகளோட காதல் திருமணம் முடிச்சவ. சமீபத்துல இடிமாதிரி என் கணவரைப் பத்தின ஒரு உண்மை தெரிய வந்துச்சு. வேற வேற பெயர்கள்ல நிறைய பேஸ்புக் கணக்குகள் தொடங்கி, பெண்களோட செக்ஸ் உரையாடல்கள் வச்சுக்கிட்டிருக்கார்... ஒருமுறை அவரோட லேப்டாப்பை உபயோகிக்கும்போது அடுத்த இடி விழுந்துச்சு. என் மொபைல்ல நான் வச்சிருந்த என் தோழிகள், என் உறவினர்கள் படங்களையெல்லாம் எடுத்து ஆபாசமா மார்பிங் செஞ்சு வச்சிருக்கார். நான் என்ன செய்யனும்... என் கணவரை மீட்பது எப்படி?

    Afficher plus Afficher moins
    14 min
  • ம்... கொஞ்சம் பேசலாமா?: 4 முறை குளிக்கிறேன்... 20 முறை கைகழுவுறேன்... கொரோனா வந்திடுமோன்னு மரண பயமா இருக்கு...! #AnxietyDisorder #NeelsHears
    Apr 13 2021

    யாரேனும் ஏதாவது ஒரு நோயைப்பற்றிப் பேசினா, அந்த நோய் எனக்கும் இருக்குமோன்னு பதற்றமாவும் பயமாவும் இருக்கு. ஒருநாளைக்கு நாலு முறை குளிக்கிறேன்... இருபது முறைக்கு மேல கைகழுவுறேன்... சானிடைசர் பாட்டில்களா வாங்கிக் குவிக்கிறேன்... ஆனாலும் கொரோனா என்னையும் என் குடும்பத்தையும் பாதிச்சுருமோன்னு மரணபயம் வருது... நான் என்ன செய்வது?

    Afficher plus Afficher moins
    13 min
  • ம்... கொஞ்சம் பேசலாமா?: நான் ஒரு பைசெக்சுவல்... ஹெச்ஐவி பேஷண்ட்... திருமணம் செய்துகொள்ளலாமா? #Neelshears
    Apr 7 2021

    எனக்கு வயசு 27. நான் ஒரு பை செக்சுவல். எப்படி இந்த நிலைக்கு நான் ஆளானேன்னு தெரியலே. சில ஆண் நண்பர்கஷோட தொடர்பால எனக்கு ஹெச்.ஐ.வி தொற்று பாதிச்சிருக்கு. கொரோனாவால கிராமத்துக்குப் போனேன். என் மாமா மகளைத் திருமணம் செஞ்சுக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க... செய்யலாமா?
    ம்... வாங்க பேசலாம்?

    Afficher plus Afficher moins
    9 min
  • ம்... கொஞ்சம் பேசலாமா?: வாடகைத்தாய் - ஏழைப் பெண்களை இலக்கு வைக்கும் மெடிக்கல் மாஃபியா! #Neelshears
    Apr 7 2021

    வாடகைத்தாய்கள் பத்தி நமக்கெல்லாம் பெரிய அளவுக்குத் தெரியாது. ஆனா, அது மிகப்பெரிய வணிகமா தமிழகத்தோட பெரு நகரங்கள்ல சத்தமில்லாம வளர்ந்துக்கிட்டிருக்கு. சென்னையில மட்டும் சுதா மாதிரி 500க்கும் மேற்பட்ட வாடகைத்தாய்கள் இருக்கிறதா சொல்லுது ஒரு புள்ளி விவரம். இந்தியாவுல வருஷத்துக்கு முப்பதாயிரம் குழந்தைகள் வாடகைத்தாய் மூலமா பிறக்குதுன்னும் சொல்லப்படுது. #Neelshears

    Afficher plus Afficher moins
    8 min
  • ம்... கொஞ்சம் பேசலாமா?: "என்னைவிட வயதில் மூத்தபெண்ணோடு தொடர்பு... குற்ற உணர்வில் தவிக்கிறேன்... விடுபடுவது எப்படி?" #Neelshears
    Mar 25 2021

    "என்னைவிட 3 வயது மூத்த உறவுக்கார பெண்ணொருத்தி 15 வருடங்களுக்கு முன்னால் என் வாழ்க்கைக்குள் நுழைந்தாள். இன்று வரைக்கும் நாங்கள் பலமுறை உடலால் இணைந்திருக்கிறோம். என் மனைவியோடு என்னால் நிம்மதியாக வாழமுடியவில்லை. அந்தப் பெண் என்னை விட்டு விலக மறுக்கிறாள். இருதலைக்கொள்ளியாகத் தவிக்கிறேன்... என் பிரச்னைக்கு என்னதான் தீர்வு" என்கிறார் அந்த இளைஞர். ம்... வாங்க பேசலாம்!

    Afficher plus Afficher moins
    10 min
  • ம்... கொஞ்சம் பேசலாமா?: சுடுகாட்டில் நடக்கும் அறுவை சிகிச்சை... திருநங்கைகளின் வலியை நாம் அறிந்திருக்கிறோமா? - Part 4
    Mar 20 2021

    திருநங்கைகளை நாம எப்படிப் பார்க்கிறோம். பொதுவிடத்தில கைதட்டி காசு கேக்குறவங்களா, பிச்சையெடுக்கிறவங்களா, கோபம் வந்தா துணியைத் தூக்கிக்காட்டி சண்டை போடுறவங்களா, பாலியல் தேவைக்காக அலையுறவங்களாத்தானே தெரிஞ்சு வச்சிருக்கோம். ஆணுடலோட பெண்ணும், பெண்ணுடலோட ஆணுமா இருக்கிற ஒரு வாழ்க்கையை உங்களால கற்பனை செஞ்சுபாக்க முடியுதா?

    Afficher plus Afficher moins
    9 min
  • ம்... கொஞ்சம் பேசலாமா?: குழந்தைகளை நாம் சரியாக வளர்க்கிறோமா?
    Mar 17 2021

    கார்த்திகா மட்டுமில்லே... நாம எல்லாருமே தெரிஞ்சுக்க வேண்டியது... குழந்தைகள் நம்மகிட்ட நிறைய எதிர்பார்க்கிறாங்க. அதை அவங்களுக்கு வெளிக்காட்டத் தெரியாம இருக்கலாம். நாம அதை உணரனும். ஏன்னா, நாமல்லாம் பெரியவங்க!

    Afficher plus Afficher moins
    9 min
  • ம்... கொஞ்சம் பேசலாமா?: சந்தேகம் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் சீரழிக்கும்..? செல்வியின் கண்ணீருக்கு தீர்வு என்ன?
    Mar 15 2021

    சந்தேகம் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் சீரழிக்கும்... எப்படி சந்தேக விதை மனசுக்குள்ள விழுது... சந்தேகம் மனசுக்குள்ள என்ன மாதிரியான ரசாயன மாற்றங்களை உருவாக்குது... செல்வியோட வாழ்க்கையில நடந்த சோகத்துல இந்த எல்லாக் கேள்விக்கும் பதில் இருக்கு! ம்... கொஞ்சம் பேசலாமா?

    Afficher plus Afficher moins
    6 min